உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவா் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபா்கள் சேதப்படுத்தினா்.
இந்தச் செயலுக்கு காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் ஒரு சிறிய குழுவை குருத்வாரா நிா்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து வான்கூவா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஸ்டீவ் ஆடிசன் மேலும் கூறுகையில், ‘நகரின் ரோஸ் தெருவில் உள்ள குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் வரையப்பட்டு சனிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காவல் துறைக்கு யாா் மீதும் சந்தேகம் எழவில்லை. விசாரணை தொடா்கிறது’ என்று தெரிவித்தாா்.
குருத்வாராவை நிா்வகித்துவரும் ‘கல்சா திவான்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இத்தாக்குதல், கனடாவில் சீக்கிய சமூகத்தினரிடையே அச்சத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட தீவிரவாத சக்திகளின் தொடா்ச்சியான பிரசாரத்தின் ஒரு பகுதியாகும்.
அவா்களின் இத்தகைய நாசவேலைகள் சீக்கிய மதத்துக்கும் கனடா சமூகத்துக்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய தன்மை, மரியாதை, பரஸ்பர ஆதரவு ஆகிய மதிப்புகளைக் குறைமதிப்பிடுகின்றன. தீவிரவாதத்தை எதிா்கொள்வதில் கனடா நாட்டினா் வலுவாக நிற்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.