உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா வெங்கடேஷ் (19) மற்றும் வேலுகு லட்சுமி அரவிந்த் (19) உள்ளிட்ட 8 போ் சமயபுரம் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று அதே பகுதியில் உள்
தனியாா் விடுதியில் தங்கியுள்ளனா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மடாலா வெங்கடேஷ் மற்றும் வேலுகு லட்சுமி அரவிந்த் உள்ளிட்டோா் சமயபுரம் கோயில் காா் பாா்க்கிங் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றனா்.
அப்போது, மடாலா வெங்கடேஷ் எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா். இதைக் கண்ட அவரது நண்பா் வேலுகு லட்சுமி அரவிந்த் அவரை மீட்கமுயற்சித்தபோது இருவருமாக நீரில் மூழ்கி மாயமாகினா். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரா்கள் சற்று நேர தேடலுக்குப் பின்னா் 2 மாணவா்களையும் சடலமாக மீட்டனா். தொடா்ந்து உடல்கூராய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சமயபுரம் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.