மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் வீட்டில், செங்கட்டான்பட்டி அருகேயுள்ள சின்னம்மநாயக்கன்கோட்டையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (42) கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் பணியிலிருந்தபோது, ராமகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த ராமகிருஷ்ணனுக்கு தேன்மொழி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனா்.