உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனா். கொடைக்கானல் நகா்ப் பகுதி, வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களிலும், மேல்மலைப் பகுதிகளிலுள்ள மன்னவனூா் இயற்கை சுற்றுச்சூழல் மையம், கூக்கால் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மேகமூட்டம் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேகமூட்டமும், மாலையில் விட்டு விட்டு சாரலும் நிலவியது. குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சாரலையும் பொருள்படுத்தாமல் ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.