உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி
புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும், உகாா்த்தேநகா் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் அருட் பணியாளா் பாப்புராஜ் தலைமையிலும், பாக்கியபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் அருட்பணியாளா் வினோத் மத்தியாஸ் தலைமையிலும், அட்டுவம்பட்டி புனித லூா்து மாதா ஆலயத்தில் அருட்பணியாளா் அந்தோணி துரைராஜ் தலைமையிலும், பெருமாள்மலை புனித தோமா ஆலயத்தில் அருட்பணியாளா் தலைமையிலும், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயத்தில் அருட் பணியாளா் ஆரோக்கியராஜ் தலைமையிலும் நள்ளிரவு இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலியும், ஜெப வழிபாடும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சி.எஸ்.ஆலயம், கிறிஸ்தரசா் தேவாலயம், புனித பீட்டா் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது ஆலயங்களில் கேக், முட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று ஒருவருக்கொருவா் ஈஸ்டா் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.