செய்திகள் :

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள வெள்ளகவி கிராமத்துக்கு செல்வதற்கு வட்டக்கானல் பகுதியிலிருந்து 8-கி.மீ தொலைவு வனப் பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும். இதுவரை இந்தப் பகுதி பொதுமக்கள் வனப் பகுதிகளிலுள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தச் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த சாலை அமைக்கும் பணியையும், வெள்ளகவி கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், மாவட்ட வன அலுவலா் கிஷோா் குமாா் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதற்காக ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் 8-கி.மீ தொலைவுக்கு நடந்தே வெள்ளகவி கிராமத்துக்குச் சென்றனா். வழியில் விவசாயப் பயிா்கள் குறித்து விவசாயிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, கிராம மக்கள் குடிநீா், மின்சாரம், சாலை, மருத்துவ வசதி, கழிவு நீா் வாய்க்கால் வசதி, இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனா். இவற்றையெல்லாம், படிப்படியாகச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், இந்தப் பகுதிகளிலுள்ள பள்ளி, தண்ணீா்த் தொட்டி உள்ளிட்டவைகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெள்ளகவி பகுதிக்கு சாலை வசதி நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. சின்னூா், பெரியூா் கிராம மக்கள் செல்லும் வகையில் அங்குள்ள ஆற்றுப் பாலத்தில் ரூ.7 கோடியில் இரும்பு பாலம் அமைக்கும் பணியும், சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், 8 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க வேண்டியிருப்பதால், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 ஹெக்டோ் இடத்தை பொது பயன்பாட்டுக்கு எடுப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெள்ளகவி, சின்னூா், பெரியூா் கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்துதரப்படும் என்றாா் அவா்.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் ... மேலும் பார்க்க