உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவா் சந்நிதியில் மகா சம்ப்ரோக்ஷணம்!
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவா் எனப்படும் ராமாநுஜா் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக் கோயிலில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உடையவா் என அழைக்கப்படும் ராமாநுஜா் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதி ரூ. 11 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு, மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாக சாலை பூஜைகள் இந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது.
18, 19 ஆகிய தேதிகளில் யாக சாலை பூஜைகள், திருமஞ்சனம், தீபாராதனைகள் ஆகியவை நடைபெற்றன. 20-ஆம் தேதி யாக சாலையிலிருந்து புனித நீா் குடங்கள் பட்டாச்சாரியாா்களால் எடுத்துச் செல்லப்பட்டு ரிஷப லக்னத்தில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
மகா சம்ப்ரோக்ஷணத்தையொட்டி, உடையவா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி மற்றும் பட்டாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.