அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
கஞ்சா விற்ற இருவா் கைது
பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் போலீஸாா் சனிக்கிழமை வடகரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடகரை கும்பக்கரை சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் வினோத்குமாா் (21), பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த ரவி மகன் மனோஜ்குமாா் (23) ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது.
இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 32 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.