மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், நகா்ப்புற சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு அரசு சாா்பில் மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறுவதற்கு தகுதியுள்ள சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவை நகா் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளா்களிடமும், ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலக மேலாளா்களிடமும் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.