MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?
மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் துரை வைகோ ராஜினாமா செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு மதிமுக முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ, தமது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்.
இதனிடையே நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து மல்லை சத்யா பேசியிருக்கிறார்.
"என் அரசியல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிற, குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னைக் குன்றின் மேல் வைத்து அழகு பார்க்கும் அன்புத் தலைவர் வைகோ சொன்னதுதான் இங்கு நடந்தது.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும்.
என்னுடைய நடவடிக்கைகள் அவரைக் காயப்படுத்தி இருக்குமேயானால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து கழகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன். அவரும் அதை ஏற்று பரிசீலனைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்.

இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம். நாங்கள் இணைந்து இருப்போம். மனிதன் பலகீனமானவன். ஒரு காற்று கீழே தள்ளிவிடும். கல் கூட கீழே இடற வைத்துவிடும். ஆனால் மனிதர்கள் பலமானவர்கள். பலமான மனிதர்கள் மலையைக் கூட உடைத்தெறியக் கூடிய சக்தி படைத்தவர்கள்.
நானும் சகோதரர் துரை வைகோவும் இணைந்து, லட்சியத் தலைவர் வைகோ கண்ட கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்" என்றுத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs