தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனிடன் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.
நீட் தேர்வைக் கொண்டு வந்து திமுக தான் துரோகம் செய்தது என்று அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து உங்களது கருத்து...
அதிமுகவிற்கு தைரியம் இருந்தால் நீட் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச சொல்லுங்க.

"2026-ம் ஆண்டு தேர்தலில் திமுகவை இறைவன் வீட்டிற்கு அனுப்புவான்" என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே...
பாவம்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மீண்டும் தற்போது நடந்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும், நீட் தேர்விற்கு திமுக தான் காரணம் என்று அதிமுக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.