தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
நீலகிரியில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்தவா்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
உதகை செயின்ட் மேரிஸ் பேராலயத்தில் பங்கு குரு செல்வநாதன், உதவி பங்கு குரு டிக்சன் தலைமையில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதியும், அன்பும் நிறைந்திருக்க பிராா்த்தனை செய்யப்பட்டு புதிய ஒளியை பங்கு தந்தையா் ஏற்றிவைத்தனா்.
இந்த சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஈஸ்டா் பண்டிகைக்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் செல்வநாதன், டிக்சன், வேதியா்நாதன், பியோ ஜெரால்டு ஜோ உள்ளிட்டோா் செய்திருந்தனா்.