தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி
சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு
குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29). அதே பகுதியைச் சோ்ந்தவா் விமல் (27). இவா்கள் இருவரும் கோவைக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
குன்னூா் பாய்ஸ் கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக திருப்பிய நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஹரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த விமல், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து வெலிங்டன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.