செய்திகள் :

கல்வி விகடனின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி; தலைசிறந்த கல்வியாளர்கள் பங்கேற்பு

post image

கல்வி விகடன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய '+2க்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்?' எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்களுக்கு தங்கள் வாழ்கையின் அடுத்த கட்டமான கல்லூரி வாழ்க்கையில் எப்படி அடியெடுத்து வைப்பது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Career Guidance Event by Kalvi Vikatan
Career Guidance Event by Kalvi Vikatan

பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தலைசிறந்த கல்வியாளர்கள் தா. நெடுஞ்செழியன், ரமேஷ் பிரபா, நித்யா மற்றும் கலைமணி கருணாநிதி ஆகியோர் வருகைதந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினர்.

பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வியை எப்படி தேர்வு செய்வது, பெருகிவரும் தொழிற்கல்வியான பொறியியல் படிப்புகள், அரசு வேலை பெற தேர்வு செய்ய வேண்டிய பட்டப்படிப்புகள், வருங்காலத்தை ஆளப்போகும் படிப்புகள் ஆகிய தலைப்புகளில் விரிவான ஆழமான ஆலோசனைகள் சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து வழங்கப்பட்டன.

வெறும் என்னென்ன படிப்புகள் உள்ளது என்று மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு படிப்படியாக ஆலோசனை வழங்கப்பட்டு, வருங்காலத்திற்கு அவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இருந்தது.

Educationalist Nedunchezhiyan
Educationalist Nedunchezhiyan

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி மதியம் 1 வரை நடைபெற்றது நிகழ்ச்சியின் இறுதியாக நடந்த கேள்வி பதில் கலந்துரையாடலில் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கல்வியாளர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

Engineering: "எதிர்காலம் உள்ள பொறியியல் படிப்புகள் என்னென்ன?" - +2 மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

இந்தாண்டு 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், 'கல்வி விகடன்' மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் '+2க்குப் பிறகு என்ன பட... மேலும் பார்க்க