தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?
நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
அசோக் தேஜா இயக்கிய ஒடேலா 2 படம் ஏப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
விமர்சன ரீதியாக ஒடேலா 2 திரைப்படம் மோசமான விமர்சனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.25 கோடி உருவாக்கப்பட்டதாகவும் இதில் 50 சதவிகித்ததைக்கூட படம் வசூலிக்காது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெறுமனே ரூ.2 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 3 நாள்களில் ரூ.6.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
