KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை..! கொலம்பஸை வீழத்திய இன்டர் மியாமி!
அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் ஃபீல்ட் திடலில் இன்டர் மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இண்டர் மியாமி அணியின் இளம் வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி 30ஆவது நிமிஷத்தில் ஹெட்டரினால் கோல் அடித்தார்.
முதல் பாதி முடிவில் 2-0 என மாற வாய்ப்பிருந்தது. மெஸ்ஸி அடித்த பந்து வலையின் நுனியில் பட்டுத் தெரித்தது.
கடைசிவரை போராடிய கொலம்பஸ் அணியினால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை என்பதால் 1-0 என இன்டர் மியாமி வென்றது.
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க மக்கள் கூடினார்கள். ஹண்டிங்டன் பேங்க் ஃபீல்ட் திடலில் இந்தப் போட்டியைப் பார்க்க 60,614 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.
இந்தத் திடலில் நேஷனல் கால்பந்து லீக்கைத் தவிர்த்து அதிக பார்வையாளர்கள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இணைந்ததுக்குப் பிறகு இந்தளவுக்கு கூட்டம் வருவது இது இரண்டாவது முறையாகும்.
இண்டர் மியாமி வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி, “கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி தலைசிறந்தவர். அதனால்தான் அவர் பல மக்களையும் கால்பந்து பார்க்க ஈர்க்க முடிகிறது” எனக் கூறினார்.
இன்டர் மியாமி அணி 8 போட்டிகளில் 5இல் வென்று 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது.
