MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கரூரில் தொடர்ந்து சதமடித்த வெயில்... வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?
கரூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது.
இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக, கரூரில் உள்ள கார் பழுது நீக்கும் மையத்தில் விட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தின் ஊழியர் பழுது நீக்கம் செய்த பின்னர், அதனைச் சாலையில் ஓட்டி பார்த்து வழங்குவதற்காக, கரூர் - பெங்களூரு சாலையில் மெக்கானிக் தனசேகர் என்பவர் கரூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகழூர் மூலிமங்கலம் பிரிவு வரை சென்று, பின்னர் மீண்டும் கரூர் நோக்கி திரும்பி உள்ளார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தளவாபாளையம் என்ற பகுதியில் வந்தபோது, காரின் முன் பக்கத்தில் புகை வருவதைக் கண்ட அவர், உடனடியாக காரை சாலையின் ஓரம் நிறுத்தியுள்ளார்.
அப்போது, கார் மளமளவெனத் தீப்பற்றி முழுவதும் எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர், காரில் இருந்து இறங்கியுள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் முழுமையாகத் தீயை அனணத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.

கடந்த சில நாட்களாகவே கரூரில் வெயில் சதம் அடித்து வரும் சூழ்நிலையில் தொடர்ந்து கரூரில் அடிக்கடி பேட்டரி இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவைத் தீ பற்றி எரிவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வெப்பம் காரணமா அல்லது பேட்டரி வாகனம் என்பதால் இப்படி கார் தீப்பற்றி எரிந்ததா என்று வாகன ஓட்டிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் தீ விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb