3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!
Malaysia Fire Accident : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து | Shocking Video
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தீ விபத்தான பெட்ரோனாஸ் நிறுவனம், "இன்று காலை 8.10 மணியளவில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறது.
#AlertaADN
— adn40 (@adn40) April 1, 2025
Una tubería de gas explotó en Puchong, Malasia; no hay reporte de víctimas pic.twitter.com/TQKgXvfBa9
தகவல் அறிந்த உடனே தீயணைப்புத் துறை தீவிரமாக மீட்புப் பணியில் இறங்கி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தீ விபத்தில் இதுவரை 12பேர் தீ காயமைடந்துள்ளதாகவும், 82பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரும் தீவிபத்து என்பதால் அருகிலுள்ள வீடுகளும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றன. அப்பகுதியைச் சுற்றி இருக்கும் மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.

தீ விபத்தடைந்த தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை எச்சரிக்கப் பகுதியாகத் தனிமைப்படுத்தி, அப்பகுதியில் இருக்கும் மூன்று எரிபொருள் நிலையங்களையும் முன்னெச்சரிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையுடன் அப்பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, மீட்புப் பணியில் இறங்கியிருக்கிறது.





இந்நிலையில் வானத்தை நோக்கி வெடித்துச் சிதறும் எரிவாயு குழாயின் தீ விபத்துக் காணொலி சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.