பெங்களூருவில் 100 அடி தேர் சரிந்து விழுந்து இருவர் பலி - விபத்துக்கு காரணம் என்ன?
பெங்களூரு ஆனேகலில் உள்ள மதுரம்மா கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்துள்ளது. இந்தத் தேரின் உயரம் கிட்டதட்ட 100 அடி ஆகும்.
நேற்று மாலை சுமார் 6 மணியளவில், இந்த தேர்கள் வீதிகளில் வலம் வந்துகொண்டிருந்தப் போது திடீரென்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் என்ன?
இந்த விபத்திற்கு கன மழை மற்றும் பலத்த காற்று தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த தேர் இடிந்து விழந்ததில் அருகில் இருந்த பார்க்கிங் பகுதி சேதமடைந்துள்ளது. சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்தக் கோவிலின் 100 ஆண்டுக்கால வரலாற்றில் இவ்வாறு தேரினால் விபத்து ஏற்படுவது இதுவே முதல் முறை என்று கோவில் தரப்பில் கூறப்படுகிறது.
கோவில் நிர்வாகிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றாததே இந்த விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
