செய்திகள் :

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும் அவரது பேரன் சூர்யா (26), பாலி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் காசிலிங்கம் ஆகிய மூவரும் மழையில் நனையாமல் இருக்க புளியமரத்தடியில் நின்றிருந்தனர். திடீரென அந்த மரத்தின் மீது மின்னல் விழுந்ததில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

இடி, மின்னல்

இதில், ராமர் மற்றும் ஓய்வு பெற்ற காவலர் காசிலிங்கம் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. அவர்களுடன் இருந்த சூர்யா படுகாயமடைந்து, உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

தகவல் கிடைத்ததும், உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மழையின்போது திறந்த வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்து அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு; வேட்டியில் பற்றிய தீ... திமுக போராட்டத்தில் பரபரப்பு

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி

மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இரு... மேலும் பார்க்க

கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?

கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எ... மேலும் பார்க்க

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5... மேலும் பார்க்க