செய்திகள் :

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

post image

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மார்ச் 11ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 12ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறையக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

மார்ச் 13 முதல் 15 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்று (11-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் பலி!

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு எருமையை விரட்டும் பணியில் ... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க