தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன?
உலகின் அதிகம் மாசடைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக மார்ச் 11ம் தேதி வெளியான அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பைர்னிஹாட் நகரம் தான் இந்தியாவிலேயே அதிகம் மாசடைந்த நகரமாக உள்ளது. டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
பைர்னிஹாடில் உள்ளா இரும்பு, எஃகு ஆலைகள், உள்ளூர் தொழிற்சாலைகள், மதுபான ஆலைகள் அதன் காற்று மாசுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் IQAir, உலக காற்று தர அறிக்கை 2024-ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி உலகிலேயே அதிக மாசடைந்த தலைநகரமாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. 2023ம் ஆண்டு அறிக்கையில் டெல்லி மூன்றாவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
13 இந்திய நகரங்கள் என்ன?
பைர்னிஹாட், அஸ்ஸாம்
டெல்லி
முல்லன்பூர், பஞ்சாப்
ஃபரிதாபாத், ஹரியானா
லோனி, உத்தரப்பிரதேசம்
புது டெல்லி, டெல்லி
குருக்ராம், ஹரியானா
கங்காநகர், ராஜஸ்தான்
கிரேட் நொய்டா, உத்தரப்பிரதேசம்
பிவாடி, ராஜஸ்தான்
முஸஃபர்நகர், உத்தரப்பிரதேசம்
ஹனுமன்கர்ஹ், ராஜஸ்தான்
நொய்டா, உத்தரப்பிரதேசம்
இந்தியாவைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள நகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
முதல் 20 இடங்களில் இருக்கும் மற்ற நகரங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர், முல்தான், பெஷாவர், சியால்கோட் ஆகிய நான்கு நகரங்களும் சீனா, சாட், கஜகஸ்தான் நாடுகளில் இருந்து தலா ஒரு நகரமும் இடம்பெற்றுள்ளது.
எனினும் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் காற்று மாசின் அளவு கொஞ்சம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டு சராசரியாக காற்றில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்து... 2024ம் ஆண்டு 50.6 மைக்ரோகிராம் என்ற அளவாக குறைந்துள்ளது.
ஆனால் டெல்லியில் 102.4 மைக்ரோகிராம் என்பதிலிருந்து 108.3 மைக்ரோகிராமாக உயர்ந்துள்ளது.