செய்திகள் :

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

post image

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கு வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின்பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் எழுந்துள்ளது. இரு நாட்டுப் படைகளும் எல்லையோர மாநிலங்களில் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூர் மைதானங்களில் நடைபெறவிருக்கும் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் போட்டிக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தெரியாது; அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதா... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தி... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவில் பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை: பிசிசிஐ துணைத் தலைவர்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறு... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மாற்றம்! இளம் வீரர் சேர்ப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில... மேலும் பார்க்க

ராவல்பிண்டி திடல் அருகே ட்ரோன் தாக்குதல்! பிஎஸ்எல் போட்டிகள் லாகூருக்கு மாற்றம்!

பாகிஸ்தானில் ராவல்பிண்டி கிரிக்கெட் திடல் அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது... மேலும் பார்க்க

முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிரணி!

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள... மேலும் பார்க்க