பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மாற்றம்! இளம் வீரர் சேர்ப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி வருகிற மே 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா போன்று இந்திய அணிக்காக விளையாடியவர்கள் சிலரே: கபில் தேவ்
இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து ஜோர்டான் காக்ஸ் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் காக்ஸுக்குப் பதிலாக அணியில் 21 வயதாகும் ஜேம்ஸ் ரியூ சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுக வீரராக அவர் களமிறங்கவுள்ளார்.
Disappointing news for Jordan Cox, who has been ruled out of our upcoming Test match against Zimbabwe.
— England Cricket (@englandcricket) May 8, 2025
It means a first senior call-up for Somerset’s James Rew, who replaces Cox in the squad.
Congratulations, James
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) , கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், சாம் குக்,ஜேம்ஸ் ரியூ , ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க்.