செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

post image

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு பிகாரைச் சேர்ந்த பெற்றோர் சிந்தூரி எனப் பெயரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்த அதிரடி தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற மே 7 ஆம் தேதி பிகாரின் கதிஹார் மாவட்டத்தில் பால்தி மகேஷ்பூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில், குந்தன் குமார் மண்டல் - சிம்பிள் தேவி என்பவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த தனது மகளுக்கு ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூரும் விதமாக, அவர்கள் சிந்தூரி எனப் பெயரிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக இப்பெயரை சூட்டியதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குந்தன் குமார் கூறுகையில், “எனது மகள் மே 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் பிறந்தாள். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியும், எங்கள் மகள் பிறந்ததும், இரண்டும் எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

அதனாலேயே இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக அவளுக்கு சிந்தூரி எனப் பெயரிட்டுள்ளோம். சிந்தூரி வளர்ந்ததும், அவள் இந்திய ராணுவத்தில் சேருவாள். இந்தப் பெயரால் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்” என்றார்.

இந்தியா மீதான தேசபக்தியில் தனது மகளுக்கு சிந்தூரி எனப் பெயரிட்டப் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பெற்றோர்கள் நீண்ட காலமாக தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான, நிகழ்வு சார்ந்த பெயர்களை வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தொற்றுநோய் காலத்தில், சத்தீஸ்கரில் ஒரு தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டனர்.

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு லாக் டவுன் யாதவ் என்று பெயரிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிப்பு! - கர்னல் சோபியா குரேஷி

8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!

இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்... மேலும் பார்க்க

பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

பஞ்சாபின் பதான்கோட் அருகில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந... மேலும் பார்க்க

ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் காவல் துறை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் எச்சரிக்கை... மேலும் பார்க்க

லாகூரில் இந்திய ராணுவம் தாக்குதல்! பாகிஸ்தானுக்கு பதிலடி

புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வான் வழி தாக்குதல்களை இன்றிரவு நடத்தியது. இந்திய எல்லைக்குள் பறந்த அந்நாட்டின் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டத... மேலும் பார்க்க

போர் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் பேசிய அமித் ஷா!

பாகிஸ்தான் உடனான போர் நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். இதேபோன்று மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை இயக்குநரிடமும் போர்ச் சூழல் குறித்து அமித் ஷா ... மேலும் பார்க்க

3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில்.. பயணிகளுக்கு வேண்டுகோள்!

3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ஏவுகணைத் தாக்... மேலும் பார்க்க