செய்திகள் :

Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?

post image

Doctor Vikatan:  மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்...  சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே... தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

கேள்வியில் உங்களுடைய வயது, உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளனவா, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவரா, உடல் பருமன் கொண்டவரா,  சராசரி எடையுடன் இருப்பவரா என்பன போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அந்தத் தகவல்கள் தெரிந்தால் இன்னும் விளக்கமாக இதற்கு பதில் அளிக்க முடியும்.

இரவில் தாமதமாகத் தூங்கும் வழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது.  அப்படி தாமதமாகத் தூங்கி, குறைந்த நேரம் தூங்கி எழுபவர்களுக்கு அடுத்த நாள் அந்தத் தூக்கம் தொடர்வதில் ஆச்சர்யமில்லை. கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

பொதுவாக இந்தப் பிரச்னைக்கு 'சோம்னாம்புலிசம்' (somnambulism) என்று பெயர். இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது உடல் பருமன்.  உடல் பருமன் கொண்டவர்களுக்கு பொதுவாகவே, இரவில் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. 

அதேபோல இவர்களுக்கு  மூளையின் தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும் திறனை பாதிக்கும் 'நார்கோலெப்ஸி' ( Narcolepsy )  பிரச்னை இருக்கலாம். அதேபோல 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless legs syndrome) போன்ற பிரச்னைகளும் இருக்கலாம். இதில் இரவில் அடிக்கடி கால்களை உதறியபடி விழித்துக்கொள்வார்கள்.

பெரும்பாலும் பகல் வேளைகளில்தான் இந்த சோம்னாம்புலிசம் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம். அதாவது பகல் நேரத்தில் சிலருக்குத் தூக்கம் அதிகம் இருக்கும்.

இவை தவிர, 'அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) என்ற பாதிப்பும் இருக்கலாம். உடல் பருமனானவர்களுக்கு, நாக்கானது சுவாசக்குழாயில் தடையை ஏற்படுத்துவதால் உண்டாகும் பிரச்னை இது. எனவே, உடல் பருமன் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களது தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் இல்லாமலும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வருவதுமாக இருக்கலாம்.

ஆல்கஹால் குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கும் தூக்கத்தில் பாதிப்பு வரும். பெரும்பாலும் பகல் வேளைகளில்தான் இந்த சோம்னாம்புலிசம் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம்.

அதாவது பகல் நேரத்தில் சிலருக்குத் தூக்கம் அதிகம் இருக்கும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு  சரியாக மாத்திரைகள் எடுக்காதபட்சத்தில், ரத்தச் சர்க்கரை அளவானது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

அதன் காரணமாக அவர்கள் சோர்வாக உணர்வது, தூங்கி வழிவது போன்றவற்றைப் பார்க்கலாம். இதே பிரச்னை தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கும் இருக்கும். 

எனவே, இதுபோல தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். வாகனம் ஓட்டும்போதோ, பயணத்தின்போதோ இந்தப் பிரச்னையால் ஆபத்துகள் நிகழலாம் என்பதால் இதில் அலட்சியம் வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க

`விமான நிலையங்களில் தீவிர சோதனை; பார்வையாளர்கள் வருகைக்கு தடை..' - பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்திய... மேலும் பார்க்க

`கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

பாகிஸ்தானின் அதிவேக சூப்பர்சோனிக் விமானமான F-16போர் விமானத்தை இந்தியாவின் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீர் மக்களை காத்து நிற்கும் `S-400 சுதர்சன் சக்ரா' அதிநவீன பாதுகாப்பு பற்றி தெரியுமா?

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் வான்வழி தாக்குதலை நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ப... மேலும் பார்க்க

இரவில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்; ஜம்மு காஷ்மீரில் ஒலித்த அபாய சைரன்; இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

Operation Sindoor: ``15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' - கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய ... மேலும் பார்க்க