Operation Sindoor: ``15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' - கர்னல் சோபியா குரேஷி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கினார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் 15 இடங்களைத் தாக்க பாகிஸ்தான் இலக்கு வைத்ததாககாவும், அதை இந்திய படை முறியடித்துவிட்டதாகவும் கர்னல் சோபியா குரேஷி கூறியிருக்கிறார்.
டெல்லியில் பேசிய கர்னல் சோபியா குரேஷி, "நேற்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்று தெளிவாகாகக் கூறப்பட்டது. அதேசமயம், இந்தியா மீது ஏதேனும் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
#WATCH | Delhi: Colonel Sofiya Qureshi says, "During the press briefing on operation Sindoor on 07 May 2025, India had called its response as focused, measured and non-escalatory. It was specifically mentioned that Pakistani military establishments had not been targeted. It was… pic.twitter.com/KIhL5Ao3DT
— ANI (@ANI) May 8, 2025
இந்த நிலையில், மே 7-க்கும் மே 8-க்கும் இடைப்பட்ட இரவில் வந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தராலி, பூஜ் என வட மற்றும் மேற்கு இந்தியாவில் ட்ரோன், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அது முறியடிக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் தாக்குதல் என்று நிரூபிக்கும் வகையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளிலிருந்து பாகங்கள் கிடைக்கின்றன." என்று கூறினார்.