செய்திகள் :

பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

post image

பாகிஸ்தான் விமானப் படையில் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு, ஆர்.எஸ்.புரம், சானி ஹிமாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியது. எஸ்.400 மற்றும் ஆகாஷ் ஆகிய போர் விமானங்கள் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தின. இந்தியா மொத்தமாக 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.

சர்கோதாவிலிருந்து பாகிஸ்தான் போர் விமானம் எஃப்-16 புறப்பட்டு ஜம்மு நோக்கி வந்து ஜம்மு விமான நிலையத்தைத் தாக்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜம்மு மட்டுமல்ல, பாகிஸ்தானின் ட்ரோன்களும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமை பாதுகாக்க இந்தியப் பாதுகாப்பு படைகள் முழு விழிப்புடன் உள்ளன. இதற்கிடையில், ஜம்மு, ஆர்.எஸ். புரம், அமிர்தசரஸ், பூஞ்ச், ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில்.. பயணிகளுக்கு வேண்டுகோள்!

3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ஏவுகணைத் தாக்... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!

பாகிஸ்தான் உடனான போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது. எல்லையோரப் பகுதியில் வசித்துவரும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு - க... மேலும் பார்க்க

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்!

புது தில்லி: இந்திய எல்லைப்புற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்

பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

உச்சபட்ச போர்ப் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: இருளில் தவிக்கும் பஞ்சாப், ராஜஸ்தான்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதலால் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,... மேலும் பார்க்க