பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வந்தன.
இந்த நிலையில், தர்மசாலா திடலில் விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டி பாதியிலேயே நிறுதப்பட்டது. திடலில் உள்ள ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.