IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!
'பதற்றம்!'
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்!' என்கிற மிஷனை முன்னெடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவியது.
இன்று இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் vs டெல்லி போட்டியும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இடையிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரும் இடையிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக இப்போது லேட்டஸ்டாக ஐ.பி.எல் சேர்மன் அருண் துமால் ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

'ஐ.பி.எல் சம்பந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. நிலைமையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். அரசுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். முக்கியமான முடிவை எடுத்தால் தெரியப்படுத்துகிறோம்.' எனக் கூறியிருக்கிறார்.