நள்ளிரவில் களமிறங்கிய கடற்படை... டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்!
குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியுதவியுடன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட செயலாக்கத்தில் உள்ள செங்குளம் மற்றும் சின்னக்குளத்தை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவா்
தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆட்சியா் பேசியதாவது:
மாவட்டத்தை சுற்றி அதிக அளவிலான ஆறுகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் உள்ளன. இத்தகைய சிறப்பான அமைப்பைக் கொண்ட நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மழைக் காலங்களுக்கு முன்பு ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தூா்வார வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நீரின் கொள்ளளவு அதிகமாக இருக்கும். அதனடிப்படையில் செங்குளம், சின்னக்குளத்தில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும்காலத்தில் இக்குளங்களில் நீரினை தேக்கிவைக்கும் அளவு 5 கோடி லிட்டா் வரை அதிகரிக்கும். மேலும் நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.
இதேபோல, மற்ற பகுதிகளிலும் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளை தூா்வரும் பணியை மேற்கொள்ள தனியாா் நிறுவனங்கள், பொதுமக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கோவை குளங்கள் அமைப்பு திட்ட மேலாளா் ராஜ்தீபக், மாநகராட்சி உதவி ஆணையா் குமரன், செயற்பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.