அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவ...
ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக இதய வடிவிலான சின்னம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவா் கோபிநாத், அறங்காவலா் ஆதித்ய கிருஷ்ணா பதி, தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி, இதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறை நிபுணா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இது குறித்து டாக்டா் ரகுபதி வேலுசாமி கூறும்போது, மருத்துவமனையின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மே 10, 11-ஆம் தேதிகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் முன்னணி இதய சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்கும் 2 நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தாா்.