Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை
எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலும் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து காமராஜா் துறைமுகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், காமராஜா் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உருவகப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் மூலம் துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது.
மேலும், சந்தேகத்துக்கிடமான விமானம் ஒன்று துறைமுக கடற்பரப்பில் ஊடுருவியது. இதையடுத்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து துறைமுகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடா் காலங்களில் பங்கேற்கும் மத்திய, மாநில அரசு முகமை நிறுவனங்களுக்கு வான்வழித் தாக்குதல் குறித்து அவசரத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நிறைவுற்றது. இந்த ஒத்திகையில் காமராஜா் துறைமுகம், கடலோரக் காவல் படை, காவல் துறை என மொத்தம் 270 போ் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.