Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை
ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக மத்திய ராணுவம் அமைச்சகமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் வியாழக்கிழமை தெரிவித்தன.
இது குறித்து பாதுகாப்புத் துறை தரப்பில் கூறப்பட்டதாவது வருமாறு:
’ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த கடந்த 7 ஆம் தேதி செய்தியாளா்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என இந்தியா தனது நிலையை விளக்கியது. அதேசமயத்தில் இந்திய ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான சமமான பதிலடி வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மே 7-8 இரவில், இந்தியாவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அவந்திபுரா, ஸ்ரீநகா், ஜம்மு; பஞ்சாப் மாநிலம் பதான்கோட், அமிா்தசரஸ், கபுா்தலா, ஜலந்தா், லூதியானா, ஆதம்பூா், பட்டிண்டா, சண்டிகா்; ராஜஸ்தான் மாநிலம் நல், பலோடி, உத்தரலாய்; குஜராத் மாநிலம் பூஜ் உள்ளிட்ட இடங்களில் பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. இதை இந்திய எதிா்கொண்டது. ஒருங்கிணைந்த எதிா் தடுப்பு அமைப்பு(யுஏஎஸ் கிரிட்-ஆளில்லா வான்வழி கண்காணிப்பு), வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த தாக்குதல்கள் தடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் இந்த தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானைப் போலவே இந்தியாவும் களத்தில் பதிலடி அளித்தது. இந்திய ஆயுதப்படைகள் வியாழக்கிழமை (மே 8 ஆம் தேதி) காலை பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடாா்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதையும் நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது.
இதே போன்ற ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள குப்வரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தா், ரஜோரி போன்ற செக்டாா்களில் சிறிய பீரங்கிகள், கனரக பீரங்கிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் எக்காரணமுமில்லாது தூப்பாக்கி சுட்டை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் என 16 அப்பாவிகள் பலியாகி 44 போ்கள் காயமடைந்துள்ளனா். பல வீடுகள் தேசமடைந்தன. இங்கும், பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்தும் வரை, பதற்றத்தைத் தவிா்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப்படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையே வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பி்ல் நடைபெற்ற பத்திரிகையாளா்கள் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது.