India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து
தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காலை 11.25 மணிக்கு அழைப்பு வந்தது. தீ மதியம் 1 மணிக்குள் முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும், விசாரணைக்காக இந்த விஷயம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளோம்’‘ என்றாா்.