உள்நாட்டிலும் மிகப்பெரிய தாக்குதல்; இருமுனை தாக்குதலால் தடுமாறும் பாகிஸ்தான்!
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வரும் இந்த வேளையில், பாகிஸ்தானின் உள்நாட்டிற்குள்ளேயே பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கே தனி நாடு குரல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே பதற்றம் உருவாகி இருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி உள்ளது பலுச் விடுதலை படை.

இவர்கள் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிழக்கு திசையில் இந்தியா, தென் மேற்கு திசையில் பலுசிஸ்தான் என இருமுனை தாக்குதல் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
ஏற்கனவே மோசமான பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு இந்த இரு முனை தாக்குதல் மேலும் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.
பாகிஸ்தான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தடுத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானால் இந்தியாவின் ஏவுகணைகளை தகர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.