நாம் செல்லும் பாதை சிங்கப்பாதை: முதல்வர் மு.க. ஸ்டாலின்
திருச்சி: நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் தி.முக. அரசின் சாததனைகள் பிரமிக்கும் வகையில் உள்ளன.
அடுத்த இலக்கை நோக்கி செல்வதால், அனைத்து திட்டங்களையும் விளக்கமுடியவில்லை. திமுக அரசின் வெற்றிப் பயணம் துவங்கியதே திருச்சியில் இருந்துதான். ஏற்கனவே, இங்கு நடந்த கூட்டத்தில் ஏழு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினேன். பெரும்பாலானவற்றை நான்கு ஆண்டுகளில் எட்டியிருக்கிறோம்.
பொருளாதாரத்தில் இதுவரை பார்க்காத 9.6 விழுக்காடு வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறோம். எந்த பிரவினரும் விட்டுப் போகாத வகையில் திட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறோம். இதை, கடந்த ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தமிழக அரசின் வரி விதிப்பு உரிமையை கூட விட்டுக் கொடுத்து விட்டனர். நான்கே ஆண்டுகளில் விடியல் ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும் என்று ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.