சித்திரை திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஞாயிறு காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடைகிறது.
மறுமார்க்கமாக மே 12ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு!
சித்திரை திருவிழா நிகழ்விற்காக சென்னை-மதுரை இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Special Trains between #Tambaram & #Madurai
— Southern Railway (@GMSRailway) May 9, 2025
The following #Specialtrains will be operated to clear extra rush of passenger during #AzhagarFestival
Advance Reservation will open at 18.00hrs of today (09.05.2025)#SouthernRailway#ChithiraiThiruvizha2025pic.twitter.com/ztGxBULeEB