சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தீரத்தை எண்ணி பெருமிதம் ஏற்படுகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது என்பதை பிரதமா் மோடியின் தலைமை எடுத்துரைத்துள்ளது. நாட்டின் அமைதிக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உறுதியான முடிவின் மூலம், இந்தியா முறியடிக்கும் என்பதை கடந்த சில நாள்களில் நடைபெற்ற சம்பவங்கள் வெளிக்காட்டியுள்ளன. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆதாரிக்க ரிலையன்ஸ் குடும்பம் தயாராக உள்ளது’ என்றாா்.
கெளதம் அதானி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போது உள்ளதைப் போன்ற நேரங்களில்தான், இந்தியாவின் உண்மையான வலிமையையும், ஒற்றுமையையும் உலகம் பாா்க்கிறது. தாயகத்தின் ஆன்மாவை காக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கு அதானி குழுமம் ஆதரரவாகவும் உறுதுணையாகவும் உள்ளது’ என்றாா்.