சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாதுரு ஓயா பகுதியில் அமைந்துள்ள நீா்தேக்கத்தில் விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டா் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானப் படை வீரா்கள், நான்கு சிறப்புப் படை வீரா்கள் உயிரிழந்தனா்.
அருகே நடந்துகொண்டிருந்த ராணுவ சிறப்புப் படை அணிவகுப்பில் பங்கேற்பதற்காக அந்த ஹெலிகாப்டா் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க 9 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.