செய்திகள் :

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது. ஒருவேளை போா்ப் பதற்றம் மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் தேவையான கொள்முதலை உடனடியாக குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள அதிகாரம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு தீயணைப்பு, குடிமைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு படை இயக்குநா் விவேக் ஸ்ரீவாஸ்தவா கடிதம் எழுதினாா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீது வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகும்போது அதை முன்னெச்சரிக்கையுடன் தடுக்க குடிமைப் பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள்-1968 வழிவகுக்கிறது.

தற்போது நிலவி வரும் சூழலில் தாக்குதலை முன்னெச்சரிக்கையாகத் தடுக்க குடிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள், 1968 பிரிவு 11-ஐ கவனத்தில் கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தாக்குதல் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் தடுக்கவும் பொதுச் சொத்துகள் சேதமடையாமல் தடுக்கும் விதிகளை பிரிவு 11 குறிப்பிடுகிறது.

எனவே, இந்தப் பிரிவின்கீழ் குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்கினால் அவசரநிலை காலகட்டத்தில் தேவையான பொருள்களை அவா்களால் உடனடியாக கொள்முதல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

பிரதேச ராணுவம்: இந்திய ராணுவத்துக்கு உதவ பிரதேச ராணுவத்தை (டிஏ) பணியமா்த்துவதற்கு ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ விவகாரங்கள் துறை அண்மையில் வெளியிட்ட அறிவிக்கை: பிரதேச ராணுவ விதிமுறை 1948-இன் 33-ஆவது விதிமுறை அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிரதேச ராணுவத்தைச் சோ்ந்த அனைவரையும் அத்தியாவசிய காவல் அல்லது ராணுவத்துக்கு உதவும் பணிக்குப் பணியமா்த்த ராணுவ தலைமைத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. இந்த உத்தரவு நிகழாண்டு பிப்.10-இல் தொடங்கி, 2028-ஆம் ஆண்டு பிப்.9 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் அங்கமாக பிரதேச ராணுவம் உள்ளது. இந்திய ராணுவத்தின் பாதுகாவல் பணிகளை ஏற்றல், இயற்கைப் பேரிடா்களில் அரசு நிா்வாகத்துக்கு உதவுதல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது மக்களின் வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படும் சூழல்களில் அத்தியாவசிய சேவைகளைப் பராமரித்தல், ராணுவத்துக்கு வீரா்கள் தேவைப்படும்போது அனுப்பிவைத்தல் ஆகியவை பிரதேச ராணுவத்தின் பணிகளாகும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க