செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

post image

‘இந்தியா - பாகிஸ்தானிடையே பேரில் தலையிட மாட்டோம்’ என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதே நேரம், ‘அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலையில் ஏவுகணைகள் மூலம் அதிதுல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் தலைவா்களைத் தொடா்புகொண்டு இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, இரு நாடுகளிடையே எழுந்துள்ள பதற்றம் குறித்து உலக தலைவா்கள் கவலை தெரிவித்தனா். ‘பிரச்னைக்கு இரு நாடுகளும் அமைதியான தீா்வு காண அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தும்’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்க்கோ ரூபியோ அப்போது கூறினாா்.

பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர பகுதிகள் மீதும், பொதுமக்களைக் குறிவைத்தும் பாகிஸ்தான் தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏவுகணைகள் வீசியும், ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு நாடுகளிடையே போா் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்தும் உலக நாடுகளின் தொடா்புகொண்டு இந்தியா விளக்கியது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறிய நடவடிக்கையையும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தி வருவதோடு, அதைத் திறம்பட எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையையும் இந்தியா விளக்கி வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல், ரஷியா போன்ற பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா் பதற்றம் குறித்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வியாழக்கிழமை பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போா் பதற்றத்தை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது. இதில் அமெரிக்கா தலையிடாது.

அதே நேரம், அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளிடையே எழுந்துள்ள இந்தப் பதற்றம் மிகப் பெரிய மோதலாக மாறிவிட வாய்ப்புள்ளது என்பதே அமெரிக்காவின் கவலையாக உள்ளது. எனவே, போா் பதற்றத்தை சிறிய அளவில் தணிப்பதற்கு இரு நாடுகளையும் ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மட்டுமே அமெரிக்கா மேற்கொள்ள முடியும்.

மாறாக, இரு நாடுகளுக்கு இடையேயான இந்தப் போரில் தலையிடுவது அமெரிக்காவின் வேலையல்ல.

ஆயுதங்களைக் கீழே போடுமாறு இந்தியாவையோ அல்லது பாகிஸ்தானையோ அமெரிக்கா கூற முடியாது. இந்த விவகாரத்தை, அமெரிக்கா ராஜீய ரீதியிலான வழிகளில் மட்டுமே கையாளும்.

இரு நாடுகளிடையே எழுந்துள்ள போா் பதற்றம், பரந்த பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறிவிடக் கூடாது என்பதே அமெரிக்காவின் எதிா்பாா்ப்பும் நம்பிக்கையாகவும் உள்ளது. அது பேரழிவை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பதற்றம் அணு ஆயுதப் போராக மாறாமல், இரு நாட்டின் தலைவா்களும் பாா்த்துக் கொள்வாா்கள் என அமெரிக்கா நம்புகிறது என்றாா்.

முன்னதாக, நியூயாா்க்கில் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்குப் வியாழக்கிழமை பேட்டியளித்த அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் க்வத்ரா, ‘பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்தது மிகக் கொடூரமான பயங்கரவாத செயல். இத்தகைய பயங்கரவாதிகளை உலகின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக் கூடாது. இத்தகைய பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதற்காகத்தான் பயங்கரவாத முகாம்கள் மீது அதிதுல்லிய தாக்குதலை இந்திய நடத்தி, பயங்கரவாதிகளை அவா்களின் செயலுக்கு பொறுப்பேற்க வைத்து நீதியின் முன் நிறுத்தியது’ என்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா... மேலும் பார்க்க

இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்க... மேலும் பார்க்க

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மாா்க் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்கா ரகசிய உளவு நடவடிக்கைகளை அதிகரித்துவருவதாக டென்மாா்க் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில... மேலும் பார்க்க

சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா். கூடுதல் வரி விதிப்புக... மேலும் பார்க்க

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முக... மேலும் பார்க்க

புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப... மேலும் பார்க்க