செய்திகள் :

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

post image

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.

முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீராம் பிழைப்பு தேடிக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மும்பைக்கு வந்து காட்கோபர் காமராஜ் நகரில் வசித்து வருகிறார்.

முரளி நாயக் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசி இருந்தார். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் தாக்குதலில் இறந்துவிட்டார்.

தனது தந்தையுடன் முரளி

முரளி தனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். அவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்திருந்தார்.

முரளியின் தந்தை ஸ்ரீராம் தனது மகனின் மரணம் குறித்துக் கூறுகையில், ''வியாழக்கிழமை காலை 8 மணிக்குத்தான் எங்களிடம் வீடியோ காலில் பேசினான்.

அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தான். சீருடையோடு எங்களிடம் பேசினான். மாலை 3 மணிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றான்.

அப்போதுதான் எங்களது மகனின் முகத்தை இறுதியாகப் பார்த்தோம். நாட்டைப் பாதுகாக்க எங்களது ஒரே மகன் வீரமரணம் அடைந்தது பெருமைதான். ஆனால் அவன் எங்களுக்கு ஒரே மகன்.

நாங்கள் கவலைப்படுவோம் என்று கருதி முரளி எங்களிடம் அவனது வேலை குறித்துத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. கடைசியாக மகர சங்கராந்தியையொட்டி மும்பைக்கு வந்து 15 நாள் எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றான்'' என்று தெரிவித்தார்.

ஸ்ரீராம் கூலி வேலை செய்கிறார். அவரது மனைவி ஜோதி வீட்டு வேலை செய்து வருகிறார். முரளி ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தது குறித்துக் கேள்விப்பட்டதும் முரளியின் புகைப்படத்திற்கு காட்கோபர் காமராஜ் நகர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட முதல் பிரிவில் முரளி தேர்வு செய்யப்பட்டார். முதலில் அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றினார்.

கடைசியாக மீண்டும் ஜம்முவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முரளி தனது நான்கு வயது வரை மும்பையிலிருந்தார். அதன் பிறகு ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊரில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.

தற்போது முரளியின் பெற்றோர் ஆந்திராவில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அங்கு முரளியின் உடல் வர இருக்கிறது. அங்குதான் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம்... மேலும் பார்க்க

ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி

மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.அக்குழந்தைகளைத் தனித்தனியா... மேலும் பார்க்க

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : மும்பை சித்தி விநாயக் கோயிலில் தேங்காய், பிரசாதத்திற்கு தடை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வெளித் தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மே7 ஆம் ... மேலும் பார்க்க

"ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது..." - குழந்தைக்கு 'சிந்தூரி' எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து 'சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ ந... மேலும் பார்க்க