'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்...
டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்?!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான ரோஹித் சர்மா, கடந்த 7 ஆம் தேதி டெஸ்ட்டில் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருப்பதாக பிசிசிஐ-யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதுகுறித்து விராட் கோலியிடம் பேசிய பிசிசிஐ நிர்வாகிகள், ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா விளையாட இருப்பதால் அது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும், உள்ளூர் லீக் போட்டியான ஐபிஎல்லிலும் விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத விராட் கோலி, பல்வேறு விமர்சனத்துக்குள்ளானார். அதைத் தொடர்ந்து ரஞ்சி தொடரில் ஒரே போட்டியில் விளையாடிய அவர் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், விராட் கோலியும் ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக டெஸ்ட் அணியை வழிநடத்தியுள்ளனர். கோலி 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கேப்டனாகவும், ரோஹித் சர்மா 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு