உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு
ஆஸி. பயிற்சியாளரை நியமித்த இராக்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தகுதிபெற வாய்ப்பு!
இராக் அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையில் தகுதிபெறும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது.
இதனை முன்னிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் அர்னால்டை தலைமைப் பயிற்சியாளராக இராக் நியமித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்கு 6 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கிரஹாம் அர்னால்ட் அவரது தலைமையில் கடந்த 2022 உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குச் சென்றது.
அந்தச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடன் ஆஸி. தோல்வியுற்றது. இறுதியில் ஆர்ஜென்டீனா கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2026 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்றில் குரூப் பி அணியில் இராக் அணி இருக்கிறது.
8 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் உள்ள இராக் அணிக்கு அடுத்ததாக 2 போட்டிகள் உள்ளன. அதில் வென்றால் 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம்.
இராக் அணிக்கு மீதமிருக்கும் இரண்டு போட்டிகளும் அந்தப் பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகளுடன் என்பது மிகுந்த சவால் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஜூன் 5 இல் தென்கொரியாவுடனும் அடுத்த 5 நாள்களில் ஜோர்டான் அணியுடனும் இராக் மோதவிருக்கிறது.
கடைசியாக இராக் 1986இல் உலகக் கோப்பையில் விளையாடியது. தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையில் தகுதிபெறும் முனைப்பில் காத்திருக்கிறது.
✍️ We are delighted to announce Graham Arnold as the new Head Coach of the Iraq National Team.
— Iraq National Team (@IraqNT_EN) May 9, 2025
Welcome to the Lions of Mesopotamia!