பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 11, 12) இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் இரவு 9.45 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06104), காட்பாடி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.50 மணிக்குச் சென்றடையும். எதிர்வழித் தடத்தில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மே 12,13-ஆம் தேதிகளில் நள்ளிரவு 1.20 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06103) அதிகாலை 4.25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!
இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் முற்பகல் 11.05 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06102) , அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்தடையும். எதிர்வழித்தடத்தில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06101), அதே நாளில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.
இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாகும். சிறப்பு ரயில்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.