ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலானது. எல்லையில் இருநாட்டு முப்படைகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்தியா எப்போதும் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான சமரசமில்லாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு, ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.