செய்திகள் :

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

post image

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளும் இந்த மோதல் போக்கை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டன என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் இரு நாடுகளும் வான், கடல், தரை வழித் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தனர்.

Commodore Raghu R Nair
Commodore Raghu R Nair

இந்த நிலையில், இந்தியா போர் நிறுத்த முடிவை அறிவித்த சிறிது நேரத்திலேயே அரசு மாநாட்டில் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், ``இன்று எட்டப்பட்ட புரிதலை நாங்கள் கடைப்பிடிப்போம். அதே நேரத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாகத் தயாராகவும், எப்போதும் விழிப்புடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான முயற்சியும் பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு தீவிரத் தாக்குதலுக்கும் ஒரு தீர்க்கமான பதிலை கொடுப்போம். தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் தொடங்க நாங்கள் முழுமையாக செயல்பாட்டு ரீதியாக தயாராக இருக்கிறோம்" என்றார்.

India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

'அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க... மேலும் பார்க்க

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ - ஒமர் அப்துல்லா

'ஒமர் அப்துல்லா பதிவு!'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வி... மேலும் பார்க்க