``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப...
கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞா் கைது
திருப்பூரில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் கொங்கு பிரதான சாலை பகுதியில் வடக்கு காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அவரிடம் கஞ்சா சாக்லெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மதன்ஜனா (26) என்பவரைக் கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து 80 கஞ்சா சாக்லெட்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.