செய்திகள் :

ஸ்வியாடெக், கீஸ் அதிா்ச்சித் தோல்வி

post image

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் சனிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 1-6, 5-7 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, 29-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸால் தோற்கடிக்கப்பட்டாா்.

அதேபோல், 5-ஆம் இடத்திலிருந்த மேடிசன் கீஸ் 6-2, 2-6, 6-7 (3/7) என்ற செட்களில் சக அமெரிக்கரான பெய்டன் ஸ்டொ்ன்ஸால் வீழ்த்தப்பட்டாா். 6-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 6-3 என, 27-ஆம் இடத்திலிருந்த துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரை வெளியேற்றினாா்.

13-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தாா்.

இதனிடையே 2-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 3-6, 6-2, 6-1 என்ற வகையில் கனடாவின் விக்டோரியா போகோவை வீழ்த்தினாா். 11-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் ஜொ்மனியின் எவா லைஸை வென்றாா்.

10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-1, 6-3 என ரஷியாவின் கமிலா ராகிமோவாவை சாய்த்தாா். இளம் வீராங்கனைகளான பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-2, 6-2 என சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்க்மானையும், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-4, 6-0 என குரோஷியாவின் அன்டோனியா ருசிச்சையும் வெளியேற்றினா்.

ரூட் ஏற்றம்; ஃப்ரிட்ஸ் ஏமாற்றம்

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்ளிக்கை வென்றாா். எனினும், 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-7 (4/7), 6-7 (3/7) என்ற செட்களில் சக அமெரிக்கரான மாா்கோஸ் கிரோனிடம் தோல்வி கண்டாா்.

11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-1, 6-4 என ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை வெளியேற்ற, 15-ஆம் இடத்திலிருந்த அமெரிக்க வீரா் ஃபிரான்சஸ் டியாஃபோ 2-6, 7-6 (7/2), 3-6 என்ற செட்களில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரிடம் தோற்றாா்.

இதர ஆட்டங்களில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக், போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா, இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி ஆகியோரும் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

அதிவேக ஹாட்ரிக் கோல்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய அலெக்சாண்டர் சோர்லோத்!

லா லீகா கால்பந்து தொடரில் அதிவேகமாக ஹாட்ரிக் கோல் அடித்து அத்லெடிகோ மாட்ரிட் வீரர் அலெக்சாண்டர் சோர்லோத் சாதனை நிகழ்த்தியுள்ளார். லா லீகா கால்பந்து தொடரில் அத்லெடிகோ மாட்ரிட், ரியல் சோசிடாட் அணிகள் இன... மேலும் பார்க்க

பேரன்புடன், மெய்! இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த கார்த்தி!

நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார். கார்த்தி - பிரேம் குமார் கூட்டணியில் உருவான மெய்யழகன் திரைப்படம் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தது. படத்தில் பேசப்பட்ட உறவு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று(மே 11) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்றத்தையொட்டி அதிகா... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலால் வீடுகள் சேதம் - புகைப்படங்கள்

ஜம்முவில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.தாக்குதலால் சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் நிற்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள்.பாகிஸ்... மேலும் பார்க்க